லைஃப்ஸ்டைல்

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் தடுக்கும் குளிர்பதன பெட்டி

Published On 2017-06-01 03:11 GMT   |   Update On 2017-06-01 03:11 GMT
குளிர்பதனப் பெட்டியின் தரம் மற்றும் அதன் குளிரூட்டும் தன்மைக்கு ஏற்ப அதில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
குளிர்பதனப்பெட்டிகளில் (ரெப்ரிஜிரேட்டர்) வைக்கப்படும் உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருப்பதை அறிவீர்கள். அது எப்படி என்பது தெரியுமா?

வீடுகளில் பயன்படுத்தும் குளிர்பதனப்பெட்டிகளில் 5 டிகிரி சென்டிகிரேடு முதல் மைனஸ் 10 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் இருக்கும். அதேநேரத்தில் குளிர்பதன பெட்டிகளில் உள்ள ‘பீரிசர்’ எனப்படும் (பொருட்களுக்கு குளிரூட்டி உறையச்செய்யும்) பகுதியில் மைனஸ் 10 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும்.

உணவுப்பொருட்களை கெட்டுப்போகச்செய்யும் நுண்ணுயிர்கள் காற்றில் கலந்துள்ளன. இவை பல்கிப்பெருக குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் மற்றும் வெப்பம் தேவை. இந்த நுண்ணுயிர்கள் குளிராக இருக்கும் பகுதியில் செயல்பட முடியாமல் முடங்கிவிடும்.



அதனால் தான் குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை கெட்டுப்போகச்செய்யும் நுண்ணுயிர்களால் சேதப்படுத்த முடியில்லை. எனவே தான் குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் நீண்ட நேரமாக கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இருப்பினும் சிலவகை உணவுகள் குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்தாலும் சில மணிகள் மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும். அதற்குள் பயன்படுத்திவிட வேண்டும். மேலும் குளிர்பதனப் பெட்டியின் தரம் மற்றும் அதன் குளிரூட்டும் தன்மைக்கு ஏற்ப அதில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
Tags:    

Similar News