லைஃப்ஸ்டைல்

இரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கும் கொத்தமல்லி

Published On 2017-04-27 02:55 GMT   |   Update On 2017-04-27 02:55 GMT
கொத்தமல்லி இரத்த குழாய்களில் கொழுப்பு சேருவது நீங்குகின்றது. மேலும் கொத்தமல்லியில் உள்ள அனைத்துவிதமான மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நாம் எத்தனையோ கீரை வகைகளைப் பற்றி பேசுகின்றோம். ஆனால் கண்ணெதிரில் கிடைக்கும் கொத்தமல்லி தழையினைப் பற்றி சற்று கவனம் செலுத்தாமல் இருந்து விடுகின்றோம். மணத்திற்காகவே இதனை சமையலில் சேர்ப்பவர்கள் அதிகம். இதன் பயன்களை அறிந்து கொண்டால் இனி அக்கறையோடு இதனை அனைவரும் பயன்படுத்துவர்.

கொத்தமல்லி இலை திசுக்களுக்கு உயிர் வலுவேற்றக் கூடியது. தேவையான அத்தியாவசமான எண்ணெய், வைட்டமின்கள், நார்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பினை நீக்க வல்லது. இதனால் இது இருதயத்திற்கு நன்மை பயக்கின்றது. ரத்த குழாய்களில் கொழுப்பு சேருவது நீங்குகின்றது.

* உயர் ரத்தக் கொதிப்பினை குறைக்கின்றது. கொத்தமல்லியில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், மங்கனீஸ், இரும்பு என பல சத்துக்கள் உள்ளன. சோடியம் குறைந்து இருக்கின்றது. பொட்டாசியம் நிறைந்து இருப்பதும் சோடியம் குறைந்து இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இரும்பு சத்து சிகப்பு அணுக்கள் உருவாக ஏதுவாகின்றது.

* நரம்பினை அமைதி படுத்துகின்றது. இதனால் மன உளைச்சல், படபடப்பு குறைகின்றது. அமைதியான தூக்கம் கிடைக்கின்றது.

* வயிறு உப்பிசம், அஜீரணம் நீங்குகின்றது.

* உடலில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.



* நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.

* கிருமி, பூஞ்ஞை பாதிப்புகளுக்கு எதிர்ப்பாகின்றது.

* உணவுப்பாதை, கல்லீரல், சிறுநீரகம் இவற்றில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது.

* முறையான ஹார்மோன்கள் சுரக்க உதவுகின்றது.

* சரும பாதிப்புகளை குறைக்கின்றது.

* வயிற்று போக்கு, வயிற்று பிரட்டல் இவற்றினை தவிர்க்கின்றது.

* வாய்புண் நீங்குகின்றது.

* அலர்ஜி பாதிப்புகள் கட்டுப்படுகின்றன.

* ரத்த சோகை தவிர்க்கப்படுகின்றது.

* இதிலுள்ள கால்சியம் எலும்பு ஆரோக்யத்திற்கு உதவுகின்றது.

ஜீஸிலோ, சாலட்டிலோ ஏதேனும் முறையில் கொத்தமல்லியினை அன்றாடம் சேர்த்துக் கொள்வதும் சிறந்த ஆரோக்கியம் அளிக்கும்.

Similar News