லைஃப்ஸ்டைல்

உடல் நலனை பேணும் காய்கறிகள்

Published On 2017-03-30 03:01 GMT   |   Update On 2017-03-30 03:01 GMT
ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. அந்த வகையில் எந்த காய்கறிகள் என்ன பயனை தரும் என்று பார்க்கலாம்.
உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

சுரைக்காய்:-
உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

உருளைக்கிழங்கு:-
மலச்சிக்கலை போக்கும்.

வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

வாழைப்பூ:
- மலச்சிக்கலை போக்கும்.



வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்.

சவ்சவ்:-
எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

வெண்டைக்காய்:- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News