லைஃப்ஸ்டைல்

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தானதா?

Published On 2016-09-26 05:53 GMT   |   Update On 2016-09-26 05:53 GMT
சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானங்களை குடிப்பது உடல் நலத்தை பாதிப்பதுடன், உயிரையும் பறிக்கும் ஆபத்து உள்ளது.
நாம் உணவு சாப்பிடுவதற்கும் முன்பும், பின்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் சில பேரிடம் இருக்கும். உணவு சாப்பிடுவதற்கு முன் எவ்வளவு வேண்டுமானலும் தண்ணீர் குடிக்கலாம் அது மிகவும் உடம்பிற்கு நல்லது.

ஏனெனில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, உணவை அளவாக உட்கொள்ள வைப்பதால், தேவையற்ற கொழுப்புகள் நம்மை சேராமல் தடுகிறது. உணவு உட்கொண்ட பின் குளிர்ந்த தண்ணீர் அல்லது குளிர்பானம் போன்றவற்றை குடிக்கக் கூடாது.

ஏனெனில் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்புகள் ரத்த நாளங்களில் படியச் செய்வதால், இதய பாதிப்புகள் அதிகமாக தாக்குகின்றது என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு, உணவு சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பான வெந்நீர், கிரீன் டீ போன்றவற்றை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

நாம் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ந்த தண்ணீரை குடிப்பதால், உடலில் கொழுப்புகள் உறைந்து இதயத்தை பாதித்து, புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சாப்பாட்டிற்கு பின் குளிர்ந்த நீர் குடிப்பதால், நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாக்கி, சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பதால், மலச்சிக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.

நம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மாரடைப்பு நோய் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த தண்ணீரை குடிக்கவே கூடாது. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுவார்கள்.

சாப்பிட்ட பின் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதால், நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்ற நோய்கள் தாக்குகின்றது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணவுகளை சாப்பிடும் போது, சாப்பிட்ட பின் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, வெதுவதுப்பான வெந்நீரை அருந்த வேண்டும். இதனால் பல நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க முடியும்.

Similar News