லைஃப்ஸ்டைல்

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் சாமை

Published On 2016-09-21 02:40 GMT   |   Update On 2016-09-21 02:40 GMT
சாமை அரிசியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வரவே வராது.
சிறுதானியம் என பெயருக்கேற்ற வகையில் விளங்கும் தானியம் சாமை. * இமாலய மலை அடிவாரத்தில் இருப்பவர்கள் மிக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு சிறு தானிய வகை உணவுகளை அவர்கள் சாப்பிடுவதே முக்கிய காரணமாகும்.

* குடலில் நீர் வற்றாமல் பார்த்துக் கொள்வதால் மலச்சிக்கலே இராது.
* மன அமைதி இருக்கும்.
* நிறைந்த நார்சத்து இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறாது.
* இதிலுள்ள மக்னீசியச் சத்து ஒற்றை தலைவலி, மாரடைப்பு இவற்றினைத் தவிர்க்கும்.
* வைட்டமின் பி3 (நியாசின்) கொழுப்புச் சக்தினைக் குறைக்கும்.
* இருதய நோய் பாதிப்புகளைத் தவிர்க்கும்.
* அலர்ஜி அற்றது.
* சைவ உணவு உடையோருக்கு நல்ல புரதசத்து அளிக்க வல்லது.

ஒரு கப் சாமையில் உள்ள சத்துகள் விவரம் வருமாறு:-

கலோரி    28.6
கார்போஹைடிரேட்    57
புரதம்    8
கொழுப்பு    2.4
நார்சத்து    3.1
மக்னீசியம்    106

* சிறு தானியங்களை அரிசி, கோதுமை, உருளை இவற்றுக்கு மாற்றாக பயன்படுத்துங்கள்.
* சாலட் உடன் சேருங்கள்.
* காலை கஞ்சி, கூழ் போன்று தயாரியுங்கள்.

சிறு தானியங்கள் நமக்கு புதிதல்ல. நாம் மறந்த ஒன்று. இதன் காரணமாக இன்று நோய்கள் அதிகரித்துள்ளன. மீண்டும் சிறுதானியங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் பெறலாம்.

Similar News