லைஃப்ஸ்டைல்

இந்தியக் குழந்தைகளின் தற்போதைய நிலை

Published On 2017-03-01 02:52 GMT   |   Update On 2017-03-01 02:52 GMT
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான சேவ் த சில்ரன் கூறுகிறது.
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான சேவ் த சில்ரன் கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காளதேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.

ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் மரணம் அடைகின்றன. அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கின்றன. 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கின்றன. இதற்கெல்லாம் ஒரே காரணம், சரியான உணவு இல்லாததுதான்.



உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகளின் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு. ஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் இருந்தனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது.

இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதகமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் நமது நாடு உள்ளது.

Similar News