லைஃப்ஸ்டைல்

வளரிளம் பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2016-10-11 07:29 GMT   |   Update On 2016-10-11 07:29 GMT
13 வயதில் இருந்து 19 வயது வரை வாழ்க்கையின் முக்கியமான பருவம். படிப்பு, எந்த துறையில் கால்பதிப்பது போன்ற மனகுழப்பங்கள் ஏற்படும் பருவம்.
வளரிளம் பருவத்தில் இயல்பாக சில பிரச்சினைகள் அனைவருக்கும் வருவதுண்டு. அந்த பிரச்சினைகளை பெற்றோரிடமோ, நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் கேட்டு தெளிவு பெற்றால் இன்னும் சந்தோஷமாக வளரிளம் பருவத்தை கடந்து செல்லலாம்.

என்னென்ன பிரச்சினைகள் வரும்?

1. மற்றவர்களிடம் அனுசரித்து போவதில் உள்ள மாற்றங்கள் (இந்த வயதில் தான் சொல்வதுதான் சரி என்று தோன்றும்)

2. பெண்களுக்கு மார்பக வளர்ச்சி, பூப்படைதல், (இதன் காரணமாக ஏற்படும் உதிரபோக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்)

3. படிப்பில் நாட்டமின்மை ஏற்படும்.

4. எதிர்பாலின ஈர்ப்பு காதல் வயப்படுதல், பாலியல் தடுமாற்றங்கள் தவறான நம்பிக்கைகள்.

5. சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால் தற்கொலை எணணங்கள், முயற்சிகள் செய்வர்.

6. தவறான நண்பர்களை தேர்வு செய்வதால் போதைப் பொருள் பழக்கம்

7 .படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்த்துவிடுதல்

8. தற்பொழுது சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.

9. சினிமா தாக்கம்

10. முறையான வழிகாட்டுதல் இன்மையால் சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

11. ஆழ்மனப் பிரச்சனைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்.(சோர்வு,உடல்பருமன், தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்கம்)

13 வயதில் இருந்து 19 வயது வரை வாழ்க்கையின் முக்கியமான பருவம். படிப்பு, எந்த துறையில் கால்பதிப்பது போன்ற மனகுழப்பங்கள் ஏற்படும் பருவம்.

இந்த பருவத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு ஆதரவாக அவர்கள் செல்கின்ற வழியில் சென்று அவர்களுக்கு சரி எது தவறு எது என்று புரிய வைக்க வேண்டும். அதிக நேரம் அவர்களுடன் செலவிடவேண்டும்.

அவர்களுடைய பிரச்சினைகளை பெற்றோருக்கு தெரிவிக்கிற அளவுக்கு நாம் பழகினால் பிரச்சினை இல்லாமல் பதின் பருவத்தை அனுபவிக்க அனுமதி தரலாம்.

Similar News