வழிபாடு

திருப்பதி பெருமாளுக்காக உலக நாடுகளில் இருந்து வரும் வாசனை திரவியங்கள்

Published On 2022-10-05 07:00 GMT   |   Update On 2022-10-05 07:00 GMT
  • பெருமாள் அபிஷேகங்களை விட, அலங்காரங்களே விமரிசையாக செய்யப்படும்.
  • திருப்பதி பெருமாளுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறியும் போது நம் விழிகள் வியப்பால் விரியும்.

பொதுவாக, பெருமாளுக்கு அபிஷேகங்களை விட, அலங்காரங்களே விமரிசையாக செய்யப்படும். ஏனெனில் அவர் 'அலங்காரப் பிரியர்' ஆவார். திருமலையில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறியும் போது நம் விழிகள் வியப்பால் விரியும்.

வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக உயர்தரமான குங்குமப்பூ, ஸ்பெயினில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கஸ்தூரி என்ற வாசனை பொருளானது அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது. உயர்தரமான பூனையின் உடலில் இருந்து பெறப்படும் புனுகு என்ற வாசனைப்பொருள் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

பாரிஸ் நகரில் இருந்து விமானங்கள் மூலமாக பல்வேறு வாசனாதி திரவியங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து விமானம் மூலம் பக்குவப்படுத்திய ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து உயர்தரமான சூடம், அகில், சந்தன கட்டைகள், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையானுக்காக கொண்டுவரப்படுகின்றன.

அபிஷேகத்தின்போது தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன், மற்ற வாசனாதி திரவியங்கள் சேர்த்து கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். அத்துடன் 50-க்கும் மேற்பட்ட வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் நடக்கும். அதன் பிறகு கஸ்தூரி சாற்றப்பட்டு, புனுகு தடவப்படும்.

Tags:    

Similar News