வழிபாடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

Published On 2022-07-30 04:58 GMT   |   Update On 2022-07-30 04:58 GMT
  • பூஜை செய்த ஒவ்வொருவருக்கும் மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.
  • சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் மகாதீப ஆராதனை நடந்தது.

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அருள்நெறி வார வழிபாட்டு குழு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். அகில பாரத சன்னியாசிகள் சங்க பொறுப்பாளர் ராமானந்தா சுவாமிகள், மயில் முருகேஷ் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மிகம் குறித்து பேசினார். மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சுவாமி ஆகியோர் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். இதையடுத்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 பெண்கள் மற்றும் சிறுமிகள் அமர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

பூஜை செய்த ஒவ்வொருவருக்கும் மஞ்சள் பிள்ளையார், உதிரி புஷ்பம், லட்டு, ஊதுபத்தி, கற்பூரம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சுகுந்த குந்தலாம்பிகை சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது.

Tags:    

Similar News