வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக 41-ம் நாள் நிறைவு பூஜை இன்று நடக்கிறது

Update: 2022-08-16 07:03 GMT
  • இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
  • இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

இதன் 41-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு கிருஷ்ணன் கோவில், குலசேகரப்பெருமாள் கோவில், சாஸ்தா கோவில் ஆகியவற்றில் சிறப்பு கலச அபிஷேகம் போன்றவை நடைபெறும்.

காலை 9.30 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் ஒற்றக்கல் மண்டபத்தில் ஏறி சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

Tags:    

Similar News