வழிபாடு

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

Published On 2022-08-06 04:09 GMT   |   Update On 2022-08-06 04:09 GMT
  • புதிய வஸ்திரங்கள் பட்சிராஜன் கருடபகவானுக்கு சாற்றப்பட்டது.
  • பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

நவ திருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் மதில் வெளி சுவர்களின் மீது மேல் பட்சிராஜன் கருடபகவான் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கருட பகவானுக்கு திருமஞ்சன அலங்காரம் செய்யப்பட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று ஆடி சுவாதி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு காலை 7மணிக்கு விஸ்வரூபம், 8.30 மணிக்கு கருடனுக்கு திருமஞ்சன அலங்காரம், நித்தியல் கோஷ்டியும் நடைபெற்றது. காலை10.30 மணிக்கு கருடனுக்கு நல்லெண்ணெய், பால், மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புதிய வஸ்திரங்கள் பட்சிராஜன் கருடபகவானுக்கு சாற்றப்பட்டது. திருவாராதனம், தளிகை நெவேத்தியம் நடந்தது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்நிகழ்சிக்கு கள்ளபிரான் சுவாமி கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், வெங்கடேசன், நிர்வாகஅதிகாரி கோகுலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News