வழிபாடு

ஆரணியில் நாளை சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-07-29 04:29 GMT   |   Update On 2022-07-29 04:29 GMT
  • சுமார் 2 மணி நேரம் திருமலையில் நடப்பது போன்று திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.
  • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த ஏப்ரல் 16-ந்தேதி சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 2-வது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆரணி ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் சார்பில் அங்குள்ள ஏ.சி.எஸ். கல்வி குழும என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

இதற்காக திருமலையிலிருந்து இன்று (வௌ்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் மூர்த்தி ஆரணிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, சர்வ தரிசனமும், அன்று மாலை 4.30 மணிக்கு சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.

சுமார் 2 மணி நேரம் திருமலையில் நடப்பது போன்று திருக்கல்யாண உற்சவம் நடக்க இருக்கிறது. பண்டிதர்களும் திருமலையிலிருந்து வர உள்ளனா். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம், குடிநீர், பழங்கள் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் செயல்-அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, முன்னாள் எம்.பி. ஏ.சி.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News