வழிபாடு

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

Published On 2023-06-13 05:57 GMT   |   Update On 2023-06-13 05:57 GMT
  • கொடை விழா ஜூலை 24,25,26-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.
  • இன்று மாலையில் திருவிளக்குபூஜை, தீபாராதனை நடக்கிறது.

ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் பூக்குழி கொடை விழா அடுத்த மாதம் (ஜூலை) 24,25,26-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இக்கொடை விழாவில் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்தும், காவடி தூக்கியும், பறக்கும் காவடி எடுத்தும் வருவார்கள். அதோடு பூக்குழி இறங்கவும் செய்வார்கள்.

அப்படி உள்ள பக்தர்கள் கொடை விழாவிற்கு 41 நாட்கள் முன்னதாக கோவிலில் வந்து அம்மனை வணங்கி மாலை போட்டு விரதம் இருப்பார்கள். அப்படி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிலில் வைத்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, தொடர்ந்து ஆலமுடு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

அதன்பின்னர் விரதம் இருக்கும் பத்தர்கள் மாலை போட்டுகொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம். மாலையில் திருவிளக்குபூஜை, தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் இ.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News