வழிபாடு

கருப்பசாமி திருக்கோவிலில் புரவி எடுக்கும் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-07-18 08:18 GMT   |   Update On 2022-07-18 08:18 GMT
  • புரவி எடுக்கும் பக்தர்கள் ஒரு வாரமாக விரதம் இருந்தனர்.
  • புரவி எடுப்பதற்கு கோவில் வளாகத்தில் மண் எடுக்கப்பட்டு புரவி செய்யப்படும்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நடுவக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு காவேரி கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் 150-வது ஆண்டாக புரவி எடுக்கும் திருவிழா இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. முன்னதாக புரவி எடுக்கும் பக்தர்கள் ஒரு வாரமாக விரதம் இருந்தனர். புரவி எடுப்பதற்கு கோவில் வளாகத்தில் மண் எடுக்கப்பட்டு புரவி செய்யப்படும்.

கோவில் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட புரவியை ஊர் மந்தையில் வைத்து கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் புறவியை ஊர் மந்தையிலிருந்து எடுத்துக்கொண்டு கோவில் வளாகத்திற்கு மேளதாளங்களுடன் கிராமப் பொதுமக்கள் வீட்டில் உள்ள அனைவரும் தாம்பூலம் தட்டுக்களுடன் புரவியின் முன்னே சென்றனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலுக்குச் செல்லப்பட்ட புரவியை இறக்கி வைத்து அங்கு சக்தி கெடா வெட்டப்பட்டு பின் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நேத்தி கடனாக கொண்டு வந்த கடாயினை அவர்கள் சமைத்து உறவினர்களுடன் விருந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News