வழிபாடு

புனிதர் தேவசகாயம் கல்லறை அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி திருப்பலி

Published On 2022-06-07 05:37 GMT   |   Update On 2022-06-07 05:37 GMT
  • மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந்தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
  • மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந்தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான நன்றி விழா கோட்டார், குழித்துறை மறை மாவட்டங்கள் சார்பில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயத்தின் கல்லறை நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் உள்ளது.

தேசிய அளவிலான நன்றி விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி திருப்பலி நேற்று காலையில் நடந்தது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராவியாஸ், கோவா டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்ராவோ, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, போபால் பேராயர் அலங்கார ஆரோக்கிய செபாஸ்டியன் துரைராஜ், பங்குதந்தை ஸ்டென்லி சகாயசீலன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News