வழிபாடு

வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்ட சிவபதியில் தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-09-23 05:42 GMT   |   Update On 2022-09-23 05:42 GMT
  • இன்று தியான மண்டபம் திறப்பு விழா நடக்கிறது.
  • 3-ந்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

கோவை அருகே வரதய்யங்கார்பாளையத்தில் ஆதிமூலப்பதியான அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு 190-வது வைகுண்டர் ஆண்டு 23-வது தேர்த்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று தியான மண்டபம் திறப்பு விழா நடக்கிறது. இதை அனுமன் குருசேத்திரம் துரை சுவாமி சித்தர் சுவாமிகள், கொங்கு மண்டலத்தை சேர்ந்த நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுடன் மேனேஜிங் டிரஸ்டி அரிராமன் முன்னிலையில், டிரஸ்டி சிவகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 3-ந் தேதி காலை 6 மணிக்கு உச்சிபடிப்பு, காலை 8 மணிக்கு அன்ன தர்மம், 10 மணிக்கு செண்டை வாத்தியம், சிங்காரி மேளம் நடக்கிறது. அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தல், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News