வழிபாடு

திருப்பதியில் இன்று தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

திருப்பதியில் கடந்த ஒரு வாரத்தில் 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Update: 2022-06-24 05:59 GMT
  • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
  • 2 லட்சத்து 74 ஆயிரத்து 840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது. இதனால் பக்தர்கள் இரவு பகல் பாராமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், காபி பால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 90,471 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ 4.13 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்ததால் கூடுதலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டுகள் நபர் ஒருவருக்கு இலவச லட்டுடன் ரூ. 50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 47 ஆயிரத்து 708 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2 லட்சத்து 74 ஆயிரத்து 840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.29.68 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

கடந்த 3 வாரங்களாக வார இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் இந்த வாரம் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு குறைவாக உள்ளது.

Tags:    

Similar News