ஆன்மிகம்
தடையை மீறி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி தடையை மீறி வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்கள்

Published On 2021-11-20 05:01 GMT   |   Update On 2021-11-20 05:01 GMT
வெள்ளியங்கிரியில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதனால் பூண்டி மலைக்கோவில் அடிவாரப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூரை அடுத்த வெள்ளியங்கிரி ஆண்டவர் பூண்டி மலைக்கோவிலுக்கு இந்த வருடம் யாத்திரை செல்வதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே வரத்தொடங்கினர். இதையறிந்த, வனத்துறையினர் அங்கு சென்று, மலையேற்றத்திற்கு தடை வதிக்கப்பட்டு உள்ளதாகவும், மலைப்பகுதியில், கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் தற்போது சூழ்நிலையில் பக்தர்கள் மலையேறினால் ஆபத்தில் போய் முடியும் என்று அறிவுறுத்தினர்.

இருந்தபோதிலும் கண்டிப்பாக மலை ஏறிய தீருவோம் என்று பக்தர்கள் கூறியதால், வனத்துறையினருக்கும், பக்தர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் பக்தர்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், ஒருகட்டத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதனால் பூண்டி மலைக்கோவில் அடிவாரப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News