ஆன்மிகம்
நாகராஜா கோவில் நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்.

நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-09-14 06:11 GMT   |   Update On 2021-09-14 06:11 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் திருமணத்தடை மற்றும் நாகதோஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் பெரிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து நுழைவு வாயிலில் இருந்தபடி பக்தர்கள் சாமி கும்பிட்டனர். மேலும் அவர்கள் பூஜைக்காக கொண்டு வந்த மஞ்சள் மற்றும் பால் ஆகியவற்றை அங்கிருந்த கோவில் நிர்வாகிகளிடம் கொடுத்து சென்றனர்.
Tags:    

Similar News