ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

11 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவில் ராஜகோபுர பகுதியில் உழவாரப்பணி

Published On 2021-07-21 07:58 GMT   |   Update On 2021-07-21 07:58 GMT
ஒரு நாள் உழவாரப் பணி போதாது, மேலும் சில நாட்கள் தொடர்ந்து உழவாரப்பணி செய்தால் மட்டுமே ராஜகோபுர பகுதி தூய்மையாக இருக்கும் என்று உழவாரப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஏழுநிலை ராஜகோபுரம் அமைந்து உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் கோவில் மற்றும் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலின் மேல் தளம் மற்றும் ராஜகோபுர பகுதியில் தூய்மைப் பணி செய்யப்பட்டது. அதன் பிறகு தூய்மை பணிகள் நடக்கவில்லை.

இந்த நிலையில் ராஜகோபுரம் மற்றும் கோவில் மேல் தள பகுதிகளில் ஏராளமான லவ்வால்கள் தங்கியுள்ளன. இதனால் வவ்வால்களின் எச்சம் காரணமாக துர்நாற்றம் வந்தது. எனவே கோவிலுக்குள் உழவாரப்பணி செய்வதுபோல கோவிலின் மேல்தளம் மற்றும் ராஜகோபுர பகுதியிலும் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை கமிஷனர் உத்தரவின்பேரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு உழவாரப்பணி செய்து ராஜகோபுர பகுதியில் குவிந்து கிடந்த வவ்வால் எச்சங்களை அகற்றி தூய்மை செய்யப்பட்டது. ஆனால் ஒரு நாள் உழவாரப் பணி போதாது, மேலும் சில நாட்கள் தொடர்ந்து உழவாரப்பணி செய்தால் மட்டுமே ராஜகோபுர பகுதி தூய்மையாக இருக்கும் என்று உழவாரப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News