ஆன்மிகம்
மா, பலா, வாழை பழங்கள் உள்ளிட்ட முப்பழ படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு முப்பழ படையல்

Published On 2021-06-26 07:47 GMT   |   Update On 2021-06-26 07:47 GMT
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு மா, பலா, வாழை பழங்கள் உள்ளிட்ட முப்பழ படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில்  சிறப்பான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதில்  அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்து வந்தனர்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமானுக்கு மா, பலா, வாழை பழங்கள் உள்ளிட்ட முப்பழ படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News