ஆன்மிகம்
காட்டுப்பட்டி பகவான் வீர ஆஞ்சநேயரின் தோற்றம்.

ஆலங்குடி அருகேவீரஆஞ்சநேயர் முகத்தில் வியர்வைதுளி பக்தர்கள் பரவசம்

Published On 2021-05-10 05:50 GMT   |   Update On 2021-05-10 05:50 GMT
ஆலங்குடி காட்டுப்பட்டி பகவான் வீர ஆஞ்சநேயரின் முகத்தில் வியர்வை துளி காணப்பட்டது. இதை பக்தர்கள் ஆச்சரியமாக பார்வையிட்டதுடன், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காட்டுப்பட்டியில் பகவான் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. சனிக்கிழமையையொட்டி இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், திரவியம் உள்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆஞ்சநேயரின் முகத்தில் வியர்வை துளி காணப்பட்டது. இதை பக்தர்கள் ஆச்சரியமாக பார்வையிட்டதுடன், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.
Tags:    

Similar News