ஆன்மிகம்
வீட்டில் மாரியம்மன் படம் வைத்து படையலிட்டு வழிபட்ட பக்தர்கள்

வீட்டில் மாரியம்மன் படம் வைத்து படையலிட்டு வழிபட்ட பக்தர்கள்

Published On 2021-04-19 08:15 GMT   |   Update On 2021-04-19 08:15 GMT
சமயபுரம் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டிலேயே, மஞ்சளில் தேர் வரைந்து, அதன் முன்பாக அம்மன் படத்தை வைத்து படையலிட்டு பயபக்தியுடன் வணங்கினர்.
அம்மன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், தேரோட்டம் நடைபெறும் 3 நாட்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் அம்மன் படத்தை வைத்து, இளநீர், துள்ளுமாவு, கொழுக்கட்டை, மாவிளக்கு வைத்தும், தேங்காய் உடைத்தும் வணங்குவது வழக்கம்.

இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அதிகரிப்பு பாதிப்பின் காரணமாக தேர்த்திருவிழா கோவிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தேர்திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏமாற்றம் பக்தர்கள் இடையே நிலவி வருகிறது. அதனால், நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டிலேயே, மஞ்சளில் தேர் வரைந்து, அதன் முன்பாக அம்மன் படத்தை வைத்து படையலிட்டு பயபக்தியுடன் வணங்கினர்.
Tags:    

Similar News