விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், உலக நன்மை வேண்டியும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றுக்குள் சவுபாக்கிய வாராகி பூஜை நடந்தது.
காவிரி ஆற்றுக்குள் மணற்பரப்பில் யானை, ஒட்டகம் மற்றும் குதிரை மீது வாராகி அம்மனை வைத்து இந்த பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளை சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்த பரத்வாஜ் சுவாமிகள் நடத்தினார்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 108 பெண்களுக்கு சேலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டன.