பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பாண்டவர்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ந் தேதி இரவு 7 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருத்தேர் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.