ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

முத்தன்குளம் பத்திரகாளி அம்மன், புதுமாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-19 04:37 GMT   |   Update On 2021-01-19 04:37 GMT
நெல்லை அபிஷேகபட்டி அருகே முத்தன்குளம் பத்திரகாளி அம்மன், புதுமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்கள் நடந்தது.
நெல்லை அபிஷேகபட்டி அருகே முத்தன்குளம் பத்திரகாளி அம்மன், புதுமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்கள் நடந்தது. முதல் நாளில் விக்னேசுவர பூஜை, சிறப்பு பூஜைகள், பழைய கோவிலில் இருந்து சாமி அழைத்தல், புனிதநீர் எடுத்து வருதல், யாகசாலை பூஜை நடைபெற்றது. 2-ம் நாளில் 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

3-ம் நாள் காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் விமானத்துக்கும், பத்திரகாளி அம்மன், புதுமாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, மகேசுவர பூஜை, அன்னதானம் நடந்தது.

விழாவில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News