ஆன்மிகம்
தங்க பிரபைக்கு பதிலாக வெள்ளி சூரிய பிரபை

தங்க பிரபைக்கு பதிலாக வெள்ளி சூரிய பிரபை

Published On 2020-09-26 07:10 GMT   |   Update On 2020-09-26 07:10 GMT
திருப்பதி பிரம்மோற்சவ விழா நேரத்தில் அந்தந்த நாட்களுக்கு உரிய வாகனங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து, அலங்கார மண்டபத்தில் வைத்து, அலங்காரம் செய்து வீதிஉலா நடக்கும்.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் தங்கத்தால் தயார் செய்யப்பட்டவை ஆகும். அந்த வாகனங்கள் கோவிலுக்கு வெளியே வைபவ மண்டபத்தில் வைக்கப்பட்டு இருக்கும். பிரம்மோற்சவ விழா நேரத்தில் அந்தந்த நாட்களுக்கு உரிய வாகனங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து, அலங்கார மண்டபத்தில் வைத்து, அலங்காரம் செய்து வீதிஉலா நடக்கும்.

ஆனால் தற்போது கொரோனா பரவலால் வீதிஉலா ரத்து செய்யப்பட்டுள்ளது. 7-வது நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சாமியை வைத்து அலங்கரிக்க கோவிலுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் சூரிய பிரபை வாகனம் பெரிய அளவில் இருந்ததாலும், எடை அதிகமாக இருந்ததாலும் ஊழியர்களால் கோவிலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அர்ச்சகர்கள், உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி கோவிலுக்குள் ஏற்கனவே இருந்த பழைய வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமியை அலங்காரம் செய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு வைத்தனர்.
Tags:    

Similar News