ஆன்மிகம்
மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதி

மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதி

Published On 2020-08-03 09:41 GMT   |   Update On 2020-08-03 09:41 GMT
மலை மாதேஸ்வரா கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி மூலவர் மாதப்பனை தரிசிக்க வேண்டும்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபடியாக சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே அமைந்துள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஞாயிறு ஊரடங்கு உள்பட அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி மூலவர் மாதப்பனை தரிசிக்க வேண்டும்.

இனி அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மலை மாதேஸ்வரா கோவில் திறந்திருக்கும் என்றும், அப்போது பக்தர்கள் வந்து மாதப்பனை தரிசிக்கலாம் என்றும் கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News