ஆன்மிகம்
ஸ்ரீசக்கரம்

நல்ல சக்திகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஸ்ரீ சக்கரம்

Published On 2020-06-03 03:43 GMT   |   Update On 2020-06-03 03:43 GMT
புகழ்பெற்ற ஆலயங்களில் சிறப்புபெற்ற மாகான்களால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் அந்த ஆலயங்கள் நிறைந்த இறையருளோடு திகழ்கிறது. குறிப்பாக கெட்ட சக்திகளை துரத்தி நல்ல சக்திகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவையாக ஸ்ரீசக்கரங்கள் உள்ளன.
புகழ்பெற்ற ஆலயங்களில் சிறப்புபெற்ற மாகான்களால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட் டிருப்பதால் அந்த ஆலயங்கள் நிறைந்த சாந்தியத்தோடும் இறையருளோடும் திகழ்கிறது. ஏறக்குறை 1000 ஆண்டுகள் கடந்தும் இத்தகைய ஆலயங்கள் நிலைத்து நின்று பக்தர்களுக்கு பலன்கள் தருவதற்கு மூலகாரணமே ஸ்ரீ சக்கரமே.

பீஜாட்சர மந்திரங்களையும், பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஸ்ரீ சக்கர வடிவத்திலே உருவாக்கப்பட்ட ஆன்மிக நகரம்தான் காஞ்சி. இங்கு குடி கொண்டு அருளாட்சி புரியு அன்னை காமாட்சியின் சிறப்பை அளவிட முடியாது.

அன்னை மூகாம்பிகை வாக்கிற்கேற்ப தேவிக்கு ஸ்ரீ ஆதி சங்கரர் கொல்லூரில் தேவிக்கு ஸ்ரீசக்கரம் அமைத்து ஆலயம் அமைத்தார். மேலும் அன்னையின் உத்தரவை சிரமேற்கொண்டு பரத கண்டம் முழுவதும் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் அமைக்கும் பணியை சிறப்புறச் செய்தார்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீ சக்கரம் பொருத்திய தாடங்கத்தை அணிவித்தார். திருக்கடையூர் அபிராமி ஆலயத்திலும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை யைக் காணலாம்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. அங்குள்ள எந்திரத்தை பார்த்தால் ஸ்ரீசக்கரமாகத் தோன்றும். சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்கரமே வைத்து பூஜை நடக்கிறது. மாங்காடு காமாட்சி அம்மன் சந்நிதியில் அம்மன் கிரகத்துக்கு முன் ஒரு மேடை மீது வரையப்பட்ட 1 1/2 மீட்டர் சதுர பரப்புள்ள சக்கரத்துக்கு வழிபாடு நடக்கிறது.

திருவாரூர் தியாகராஜர் மார்பிலும் ஒரு ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.

சிதம்பரம் கோவில் சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகிற இடத்தில் திருவம்பலச் சக்கரம் என்கிற சிதாகாச சக்கரம் அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் தன் மார்பில் அணிந்துகொள்ளும் பதக்கம் அறுகோண வடிவில் சக்கர வடிவில் அமைந்துள்ளது. தேவிபூஜை செய்பவர்கள் ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடுவர். அபிஷேகம், அர்ச்சனை, பாராயனம், ஜெபங்கள், நைவேத்யம் என அனைத்து உபசரனங்கள் செய்து கற்பூர ஆரத்தியுடன் நிறைவு செய்வர்.

விக்கிரகத்தின் உயிர் தேவை யந்திர ரூபத்தில் வாசம் செய்கிறாள். பிந்து என்பது சிவன். நாதம் என்பது சக்தி. பிந்து என்பது வட்டம், நாதம் என்பது முக்கோணம்.
கோடுகள், வட்டங்கள், சதுரங்கள் அந்த கோடுகளால் விளைந்த கோணங்கள் அனைத்தும் ஒரு சக்கரத்தில் அமைந்து மத்தியில் புள்ளியுடன் (நடுப்புள்ளி) இருப்பதே யந்திரம். இத்தகைய வடிவத்துக்கு ஒவ்வொரு தேவதையின் ஆற்றலை கிரகித்து கொடுக்கும் அபரிமிதமான சக்தி உண்டு. குறிப்பாக கெட்ட சக்திகளை துரத்தி நல்ல சக்திகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவையாக ஸ்ரீசக்கரங்கள் உள்ளன.

மத்தியில் பிந்துவைச் சுற்றி 43 கோணங்கள், 5 ஆவரணங்களாக அமைந்துள்ளது. அதையும் சேர்த்தால் ஆறு ஆவரணம், நவாவரணம் என்பது ஸ்ரீசக்கரத் தில் காணும் 9 சுற்றுகள்தான். அந்த ஆவரணங்கள் ஒவ்வொன் றிலும் அடங்கிய தேவதைகள் உள்ளது.

அதை சுற்றி இருப்பவர் கள் (அதற்குள்ள) அதி தேவதைகள் ஆவர்.

ஸ்ரீசக்கர மகாமேரு 9 சக்கரங்களை உள்ளடக்கியது. அவை முறையே 1. த்ரைலோக்ய மோகன சக்கரம், 2. சர்வாசாபரிபூரக சக்கரம், 3. சர்வசம்ஷோபன சக்கரம், 4. சர்வ சவுபாக்யப்ரத சக்கரம், 5. சர்வார்த்த சாதக சக்கரம், 6. சர்வ ரக்சாகர சக்கரம், 7. சர்வரோகஹர சக்கரம், 8. சர்வசித்தி ப்ரத சக்கரம், 9. சர்வானந்தமய சக்கரம்.
ஸ்ரீ சக்கரத்தை தங்கம், வெள்ளி, பஞ்சலோகம் கொண்டு சாஸ்திர விதிப்படி தயார் செய்து ஜீவன் அளித்து முறையான பூஜைகள் செய்து உபாசகன் நித்ய பூஜை தொடங்குவது சிறப்பாகும்.

பூஜைக்குரிய மலர்கள்

வெள்ளை புஷ்பம் - சரஸ்வதியை உபாசித்து வித்தை, கல்வி, பாக்கியம் சேரும்.
சிவப்பு வெள்ளை புஷ்பம் - கலந்து அர்க்சித்தால் ராஜவச்சியம், சவுபாக்கியம் கிட்டும்.
மஞ்சள் புஷ்பம் - திருமகளின் திருவருள் கிட்ட இதை பயன்படுத்தலாம்.

அபிஷேகம், நிவேதனம், பாராயணம்

ஸ்ரீ சக்கரத்துக்கு தேன், பால், வாசனைப்பொடி, மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. புருஷஸ¨க்தம், ஸ்ரீ ஸ¨க்தம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். வசதிக்கேற்ப அஷ்டோத்திரம், கட்கமாலா, திரிசதி, சகஸ்கரநாம பாராயணம்/அர்ச்சனை செய்யலாம்.
பயத்தம்பருப்பு பாயாசம், உளுந்துவடை, பானகம், பஞ்சாமிர்தம் நிவேதித்து, கற்பூர ஆரத்தி செய்வது நடைமுறை. ஸ்ரீசக்கரம் என்பது எந்திரம், மடி, ஆசாரம் மிகவும் அவசியம்.

மகாமேரு

மகாமேரு என்பது வெள்ளி, தங்கம், இரும்பு, செம்பு, ஈயம் ஆகிய ஐந்து உலோகங்கள் விதிமுறைப்படி கலந்து சாஸ்திரிய முறைப்படி செய்த பஞ்சலோக மகாமேரு என்பர். மகாமேரு என்றால் உயர்ந்த மலை என்று பொருள் கூறலாம்.

சில ஆலயங்களில் அன்னை குடிகொண்ட சந்நிதியின் முன் ஸ்ரீசக்கர பிரதிஷ்டையைக் காணலாம். இந்த ஸ்ரீசக்கரமே உயரமாக அதில் பொருந்தியுள்ள அம்சங்கள் நன்றாக தெரியும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும். அதுவே மகாமேரு என்பர். மேருவை மூன்று வகையாக ஸ்ரீசக்கரம், அர்த்தமேரு, மகாமேரு என்று பிரித்து பூஜிப்பர். ஸ்ரீசக்கரம் என்பது எந்திரம். ஆனால் அதில் நீள அமைப்புகள் மாறாமல் உயரத்தில் மட்டும் மாற்றம் செய்தால் அதுவே மகாமேரு.

நவாவரண பூஜை

அதிசிறப்பான பூஜை. இதில் உள்ள 9 அவரணத்தை மையப்படுத்தியே செய்யப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள 43 முக்கோணத்துக்கு அடிப்படை 9 கோடுகளே ஆகும். இது நவக்கிரகத்தை குறிக்கும். இவற்றை இணைக்கும் கோடுகள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இந்த இணைக்கும் குறுக்கு கோடுகள் ஸ்ரீ சக்கர வழிபாட்டில் கிரக பீடைகளை களைந்து வாழ்வில் சுபிட்சம் பெற வழி வகை செய்யும். இன்னும் சிறப்பாக இதை சப்தபதி பாராயணம் செய்வதற்கு சமமாக இந்த வழிபாட்டை பேசுவர்.
Tags:    

Similar News