ஆன்மிகம்
ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2020-01-18 04:40 GMT   |   Update On 2020-01-18 04:40 GMT
தேய்பிறை அஷ்டமியையொட்டி திண்டுக்கல் மற்றும் தாடிக்கொம்புவில் உள்ள கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு நேற்று மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் தாடிக்கொம்புவில் உள்ள பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பால், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். இதில் திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News