ஆன்மிகம்
சிவகாமசுந்தரி சமேத நடராஜர், ராஜகோபுரம் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

Published On 2020-01-11 03:34 GMT   |   Update On 2020-01-11 03:34 GMT
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடராஜர் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந் தது.நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ராஜகோபுரம் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி திருவீதி உலாவும் நடந்தது.

ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.

வேலூர் பேரிப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாத சாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமி உடனுறை நடராஜருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு கோபுர தரிசனமும், சாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
Tags:    

Similar News