ஆன்மிகம்
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2019-12-17 08:06 GMT   |   Update On 2019-12-17 08:06 GMT
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு சோமவாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு தாயுமானசுவாமிக்கு 108 சங்குகளை வைத்து மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி எதிரில் உள்ள உற்சவ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

இதில் நேற்று கார்த்திகை மாதம் 5-வது சோமவாரத்தை முன்னிட்டு மலையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி சன்னதி அருகில் உள்ள மண்டபத்தில் மாலை 4 மணியளவில் தாயுமான சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக 1,008 சங்குகளில் தீர்த்தம் வைக்கப்பட்டது. பின்னர் சந்தனம், குங்குமம், பூக்களை வைத்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் 1,008 சங்குகளில் இருந்த தீர்த்தத்தை கொண்டு தாயுமானசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தருமபுரம் ஆதீனம் மவுனமடம் கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ என்று கோஷங்கள் எழுப்பி தாயுமான சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News