ஆன்மிகம்
வேணுகோபால அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருப்பதி பிரம்மோற்சவம்: ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் மலையப்பசாமி வீதிஉலா

Published On 2019-10-03 03:36 GMT   |   Update On 2019-10-03 03:36 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. மிருகங் களின் தலைவனான போற்றப் படுவது சிங்கம். உற்சவர் மலையப்பசாமி சிங்க வாகனத்தில் எழுந்தருளினார்.

தங்க முலாம் பூசப்பட்ட சிம்மம் ஆக்ரோஷமாக விழித்து நோக்க, அதன் மீது யோக பட்டயம் அணிந்த வராக, கால்களை மடித்து குத்திட்டு அமர்ந்த கோலத்தில் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை உற்சவர் மலையப்பசாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதையடுத்து உற்சவர் மலையப்பசாமி அலங்கார மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.

இரவு மலையப்பசாமி உபய நாச்சியார்களுடன் வேணுகோபால அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News