ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா

சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா

Published On 2019-08-26 06:11 GMT   |   Update On 2019-08-26 06:11 GMT
ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாதம் முதல் தேதியன்று அனைத்து கோவில்களிலும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி புறப்பாடு கடந்த வாரம் நடைபெற்றது.

ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று காலை 7 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரத்துடன் தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மேலாளர் லட்சுமணன், மணியக்காரர் ரமணி மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காமதேனு வாகனம், ரிஷப வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் ஆகியவற்றில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
Tags:    

Similar News