ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார் கோவிலில் அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவில் சிவபெருமானுக்கு அமுது படையல்

Published On 2019-07-18 03:43 GMT   |   Update On 2019-07-18 03:43 GMT
காரைக்கால் அம்மை யார்கோவிலில் சிவ பெருமானுக்கு அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இறைவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா கடந்த 13-ந்தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. 14-ந் தேதி திருக்கல்யாணம், 15-ந் தேதி பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் 4-ம் நாள் முக்கிய நிகழச்சியாக நேற்று முன்தினம் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா வந்தார். அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்தனர். இரவில் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, எம்.எல்.ஏ. அசனா, துணை கலெக்டர் ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவல் குழுத்தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News