ஆன்மிகம்

அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2019-04-29 06:19 GMT   |   Update On 2019-04-29 06:19 GMT
அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு கலைநிகழ்ச்சிகளும், அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 8-ந்தேதி காலை 8 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், பிற்பகல் முத்தாரம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் வக்கீல் மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளர் ராஜலிங்க பெருமாள், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News