ஆன்மிகம்

கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Published On 2019-04-22 03:17 GMT   |   Update On 2019-04-22 03:17 GMT
திருப்பூரில் கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி வாகனங்கள் நிறுத்துவதற்கு 6 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் உள்ள கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம், ஆம்புலன்சு உள்ளிட்ட அடிப்படை மற்றும் அவசர வசதிகள் அனைத்தும் திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்களுக்கு வசதியாகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு முக்கிய பிரமுகர்களுக்கு தனியாகவும், பக்தர்களுக்கு தனியாகவும் 6 இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முக்கிய பிரமுகர்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் மங்கலம், வஞ்சிபாளையம், 15 வேலம்பாளையம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் அணைபாளையம் சோதனைச்சாவடி அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள பெரிய தோட்டத்திலும், திருப்பூரில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் சிக்கண்ணா கல்லூரியின் 2-வது கேட் பகுதி மற்றும் சரணாலயா பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

இதேபோல் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மங்கலம் ரோட்டில் இருந்து வருபவர்கள் ஆண்டிபாளையம் நொய்யல் பாலம் அருகில் மற்றும் சிக்கண்ணா கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களையும், பாரதி கிட்ஸ் பள்ளி வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
Tags:    

Similar News