ஆன்மிகம்

அழகுமுத்து ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-04-16 07:14 GMT   |   Update On 2019-04-16 07:14 GMT
கடலூர் அருகே அழகுமுத்து ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அழகர் சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமையன்று

இக்கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்தில் முதல் திங்கட்கிழமையான நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து கரகங்கள் புறப்பட்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை ஆற்றிலிருந்து காவடிகள் புறப்பட்டு சென்று அழகு முத்து ஐயனாருக்கும், பூரணி பொற்கலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா ஆராதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து மாலையில் 108 மேளம் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் வாத்தியத்துடன் அழகு முத்து ஐயனாருக்கும், பூரணி பொற்கலை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News