ஆன்மிகம்

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர்

Published On 2019-03-31 04:16 GMT   |   Update On 2019-03-31 04:16 GMT
திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது.

மார்க்கண்டேயர் விருப்பத்தின்படி, இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார். அம்மன் பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி என்ற பெயரில் அருள்புரிந்து வருகிறார்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடைமருதூர் கோவில் மகாலிங்கதலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.

பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கிதவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
Tags:    

Similar News