ஆன்மிகம்

ராமனுக்கு உதவி நளன்

Published On 2019-02-23 07:46 GMT   |   Update On 2019-02-23 07:46 GMT
ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். ராமனுக்கு நளன் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். வானர வீரரான இவர், சிறந்த போர் வீரராக இருந்தார். இலங்கை சென்று சீதையை மீட்க வேண்டுமானால், கடலைக் கடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு முனிவரின் சாபத்தால் ‘எதை கடலில் எறிந்தாலும் அது மிதக்கும்’ என்று சாபம் பெற்றிருந்த நளன், கடலின் நடுவே பாலம் அமைக்க முன் வந்தார். தன்னைப் போலவே சாபம் பெற்றிருந்த நீலனுடன் சேர்ந்து அவர் பாலம் அமைக்கத் தொடங்கினார்.

அதன்படி மற்ற வாரன வீரர்கள் பாறைகளை கொண்டு வந்து குவிக்க, அவற்றை நளனும், நீலனும் தங்கள் கரங்களால் கடலில் போட்டனர். அந்த பாறைகள் மிதந்தன.

இவ்வாறாக கடலில் பாலம் அமைக்கப்பட்டது. ராவண யுத்தத்தில், அசுர படை தளபதிகளில் ஒருவரான தபனன் உள்பட பல அசுரர்களை, நளன் அழித்தார். அதே நேரம் ராவணனின் மகன் இந்திரஜித் வீசிய அம்பு ஒன்று, நளனை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.

Tags:    

Similar News