ஆன்மிகம்

நெய்யில் மறைந்த லிங்கம்

Published On 2018-08-20 09:10 GMT   |   Update On 2018-08-20 09:10 GMT
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பழங்காலத்தில் இருந்தே நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு வருவதால் இந்த சிவலிங்கம் முழுவதும் நெய் உறைந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்குநாதர் ஆலயம். இங்குள்ள சிவலிங்கத்திற்கு பழங்காலத்தில் இருந்தே நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து செய்யப்பட்டு வந்த நெய் அபிஷேகம் காரணமாக, இந்த சிவலிங்கம் முழுவதும் நெய் உறைந்துள்ளது.

உறைந்த நெய்யின் உயரம் மட்டுமே நான்கு அடிக்கு மேல் இருக்கும். கருவறைக்குள் எத்தனையோ விளக்கு எரிந்த சூட்டிலும், கோடை காலத்தில் நிலவும் வெப்பச் சூழலிலும் கூட இந்த நெய் உருகுவதில்லை.

இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. உறைந்த நெய்யை பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். அதை உண்டால், தீராத நோயும் தீருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 
Tags:    

Similar News