ஆன்மிகம்

திருச்செந்தூர் அவதாரப்பதியில் புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி

Published On 2018-07-23 09:28 GMT   |   Update On 2018-07-23 09:28 GMT
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 6.30 மணிக்கு பால் அன்னதர்மம், 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதர்மம், 3 -ந் மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி, 8 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11-ந் திருவிழா வருகிற 30-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் வள்ளியூர் தர்மர், துணைச்செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணைத் தலைவர்கள் சிங்கபாண்டி, தோப்புமணி, பேராசிரியர் விஜயகுமார், அய்யாபழம், இணைச் செயலாளர்கள் பொன்னுத்துரை, செல்வின், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்ககிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், உறுப்பினர்கள் செல்வம், ஆதிநாராயணன், கண்ணன், மற்றும் மாரியப்பன், ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News