ஆன்மிகம்

திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி 20-ம்தேதி நடக்கிறது

Published On 2018-07-19 06:57 GMT   |   Update On 2018-07-19 06:57 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள், கருடாழ்வாருக்கும் சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு வேதபாராயணம், சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அப்போது தேன், இளநீர், நெய், பால், பழவகைகள் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. இதில் பூக்களால் பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் சிறப்பு அர்ச்சனை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுபத்ரா, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News