ஆன்மிகம்
திருப்பதி கோவில் சுத்தப்படுத்தும் பணி நடந்த காட்சி.

திருப்பதி கோவில் சுத்தப்படுத்தும் பணி - 12 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2018-07-10 06:27 GMT   |   Update On 2018-07-10 06:27 GMT
ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவில் சுத்தப்படுத்தும் பணி முடிந்ததை அடுத்து 12 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி வரும் ஜூலை 17-ந்தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது.

அதனால் அதற்கு முன்வரும் செவ்வாய்க் கிழமையான இன்று காலை கோவில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர். 12 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News