ஆன்மிகம்

குலதெய்வம் என்பது என்ன?

Published On 2018-06-18 08:36 GMT   |   Update On 2018-06-18 08:36 GMT
குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள்.
குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு ஜாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன.

கருப்பு, ஐயனார், மதுரை வீரர், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர். திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளிலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள். கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல ஜாதிகளை சேர்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்று சிறப்பு பெயர் கிராமத்தில் நிலவுகிறது.

குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர். அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது. திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன் நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக செய்கின்றார்கள்.

குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே...
குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி...

என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றன.
Tags:    

Similar News