ஆன்மிகம்

திருக்கடையூர் அபிராமி - அழகுமுகம்

Published On 2018-06-09 10:08 GMT   |   Update On 2018-06-09 10:08 GMT
திருக்கடையூரில் அபிராமி அழகு கோலத்தில் காட்சியளித்து, பக்தர்களை காத்து வருகிறாள். அன்னையின் திருஉருவம் மிகவும் அழகு வாய்ந்தது.
திருக்கடையூரில் அபிராமி அழகு கோலத்தில் காட்சியளித்து, பக்தர்களை காத்து வருகிறாள். கருவறைக்குள் மேற்கு நோக்கி அமுத கடேசுவரர் மகாலிங்கத் திருமேனியராக காட்சி தருகின்றார். நீண்ட ஆயுளைப் பெற்று வாழ விரும்புவோர் இப்பெருமானை வழிபடுகின்றனர்.

மேற்கு நோக்கிய இத்திருச்சன்னிதிக்கு எதிரில் வெளிப் பிராகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு நோக்கித் திருக்கோயில் கொண்டு திகழ்கின்றாள். அன்னையின் திருஉருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி உயர பீடத்தில் நான்கு கரங்களோடு நின்று அருள்கிறாள்.

இரண்டு கரங்கள் அபய வரத முத்திரைகள் தாங்க, இரண்டு கரங்கள் மலரும் மாலையும் தாங்கித் திகழ்கின்றன. அன்னையின் திரு நயனங்களோ அருளை வாரிப் பொழிகின்றன.

நீண்ட ஆயுளைப் பெற்று விட்டால் போதுமா? இன்னலற்ற இன்ப வாழ்வினைப் பெற வேண்டாமா? வாழும் நாள் சிறிதேயாயினும், அதில் இன்னலற்று வாழத்தானே எல்லோரும் விரும்புகின்றனர். அந்த இன்னலற்ற- நோய் நொடியற்ற இன்ப வாழ்வினை அன்னை அபிராமி வழங்குகிறாள்.

நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வினையும் பெற வேண்டும் என்பதனை உணர்த்தும் பொருட்டே அன்னையும் அண்ணலும் எதிர் எதிரே எழுந்தருளியுள்ளனர். ஈசனை வழிபட்டுத் திரும்பும் அந் நிலையிலேயே அன்னையையும் வழி பட வேண்டும் என்பதன் பொருட்டே நம் அன்னையும் அப்பனும் எதிர் எதிரே நின்று அருளுகின்றனர்.

Tags:    

Similar News