ஆன்மிகம்

கும்பாபிஷேகத்தின் தத்துவம்

Published On 2018-05-14 09:20 GMT   |   Update On 2018-05-14 09:20 GMT
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன் தத்துவத்தை கூர்ந்து பார்த்தால் பஞ்ச பூதங்களுக்குள்ளும் இறைசக்தி இருப்பதை நாம் உணரமுடியும்.
ஆலயங்களில் முக்கியமானது கும்பாபிஷேக நிகழ்ச்சியாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன் தத்துவத்தை கூர்ந்து பார்த்தால் பஞ்ச பூதங்களுக்குள்ளும் இறைசக்தி இருப்பதை நாம் உணரமுடியும்.

அருவமாக உள்ள இறைவனை உருவ வடிவில் கொண்டுவந்து வணங்குவதே இதன் தத்துவமாகும். வானத்தில் (ஆகாயம்) அருவ நிலையிலுள்ள இறைவனை மந்திர ஒலிகள் (காற்று) மூலமாகவும் (நெருப்பு) வழியேயும், கும்பத்தில் (நீர்) கொணர்ந்து விக்கிரகம் (கல்) மீது ஊற்றும் பொழுது பஞ்சபூதங்களும் இணைந்து அதன் மூலம் இறைசக்தியை நமக்கு வழங்குகிறது. 
Tags:    

Similar News