ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2018-03-23 06:28 GMT   |   Update On 2018-03-23 06:28 GMT
பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விளா பூஜையில் முருகனுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளைநிற மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பங்குனி மாத கார்த்திகை விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார்.

அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 82 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News