ஆன்மிகம்

அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2018-03-23 03:31 GMT   |   Update On 2018-03-23 03:31 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டபதியில் அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டபதியில் அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை கொடியேற்றம், பகல் 12 மணிக்கு தீர்த்தமாட செல்லும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு வாகன பணிவிடை, அன்னதானம் போன்றவை நடக்கிறது.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அய்யாவின் வாகன பவனி, அன்னதானம் போன்றவை நடைபெறும். 30-ந் தேதி இரவு 8 மணிக்கு கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவில் திருஏடு வாசிப்பு நடைபெறும். பின்னர் திருக்கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முட்டபதி அய்யா வைகுண்டசாமி பதி தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News