ஆன்மிகம்

இன்று விசேஷசமான பிரதோ‌ஷம்: சிவனை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும்

Published On 2018-02-27 10:26 GMT   |   Update On 2018-02-27 10:26 GMT
இன்று வரும் பிரதோ‌ஷம் மிகவும் அபூர்வமான பிரதோ‌ஷம் ஆகும். சிவன் கோவில்களில் அபிஷேகம் மற்றும் கிரிவலம் சென்றால் கடன் தொல்லை தீரும்.
இன்று வரும் பிரதோ‌ஷம் மிகவும் அபூர்வமான பிரதோ‌ஷம் ஆகும். செவ்வாய்க் கிழமையான இன்று வரும் பிரதோ‌ஷத்திற்கு ருண விமோசன பிரதோ‌ஷம் என்று அழைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிரகம் கடன் தொல்லை தரவும் செய்யும், தீர்க்கவும் செய்யும். கடன் தொல்லையால் அவதிப்படுவோர் இந்த பிரதோ‌ஷத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சித்தர்களின் ஜீவ சமாதி, பழமையான சிவன் கோவில்களில் வழிபாடு செய்யலாம். சரபேஸ்வரரையும், லட்சுமி நரசிம்மரையும் பிரதோ‌ஷ வேளையான இன்று மாலை வழிபடுவது சிறப்பை தரும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும், பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கழுகு மலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் கிரிவலம் வரலாம்.

திருச்செந்தூர் செல்வோர் ஸ்ரீசத்குரு சம்காரமூர்த்தி சாமிகள் ஜீவசமாதியிலும், கழுகுமலை செல்வோர் மிளகாய் பழ சித்தர் ஜீவசமாதியிலும் வழிபாடு செய்ய வேண்டும். பழனி செல்வோர் போகர் சமாதியிலும், ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஜீவசமாதியிலும் வழிபாடு செய்யலாம்.

திருப்பரங்குன்றம் செல்வோர் மாயாண்டி சித்தர் ஜீவ சமாதியிலும், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சரபங்க ரிஷி ஜீவ சமாதியிலும் வழிபாடு செய்யலாம். மற்ற நகரங்களில் இருப்போர் அங்குள்ள சித்தர்கள் ஜீவ சமாதியிலும் வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் அபிஷேகத்திலும் பங்கேற்கலாம்.
Tags:    

Similar News